Headline NEWS :
Home » » மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

{[['']]}
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகம் “மட்டக்களப்பு பிரிமியர் லீக்”; போட்டியை வெகுவிமர்சையாக நடாத்தவுள்ளது.

இந்த சுற்றுப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் (மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு) முதல் பதிவு செய்யும் 32 கழகங்களை விரைவாக எதிர்பார்க்கின்றோம்.

ஒவ்வொரு வலயத்திலும் 32 அணிகளும் விலகல் முறையில் (
(Knockout)) போட்டிகள் நடைபெற்று 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெறும் அணிகள் மிக பிரமாண்டமான வி.பி.எல்.சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெறும் (மட்டக்களப்பு வலயத்தில் மட்டுமே அரை இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் நான்கும் உள்வாங்கப்படும்).

மட்டக்களப்பு     -    32 அணிகள்          -         04
கல்குடா        -                  32அணிகள்        -    03
பட்டிருப்பு         -              32 அணிகள்        -    03

தெரிவு செய்யப்படும் அணிகளின் எண்ணிக்கை  =     10

இந்த தெரிவு செய்யப்பட்ட 10 அணிகளும் மட்டக்களப்பிலுள்ள பிரபல வர்த்தகர்கள் பொறுப்பேற்று அந்த 10 அணிகளில் உள்ள வீரர்களையும் குழுக்கல் முறையில் தெரிவு செய்து மீண்டும் புதிய அணிகள் புதுப் பெயருடன் உதயமாகும்.
;
வலயத்தில் நடைபெறும் வி.பி.எல்.தெரிவுப் போட்டிகளுக்கான விதி முறைகள்;
    அணிக்கு 9 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாகும்.  மேலதிகமாக அணியில் இருவர் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

    போட்டிக் கட்டணம் 1000 ரூபா அறவிடப்படும்.
    போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் நடைபெறும.;

    எந்த ஒரு வீரரும் காற்சட்டை, சேட் அணிந்து போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

    அரசாங்க அமைப்பில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மாத்திரம் பதிவு செய்யப்படும்.

    பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் BPL அனுமதி அட்டையை பிரதேச விளையாட்டு உத்தியோகத்திரின் முத்திரை அச்சிட்டு கையொப்பதுடன் முழு விபரத்தையும் நிரப்பி உரிய திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.

    ஒரு வலயத்தில் விளையாடிய வீரர்கள் மற்றைய வலயத்தில் விளையாட முடியாது. இதை கருத்திற் கொள்ளாது விளையாடினால் இரண்டாவது வலயத்தில் அவர் விளையாடும் அணி  முற்றாக போட்டிகளில் இருந்து விலக்கப்படும்.

    போட்டி சமனிலையில் முடிவுற்றால் ஒவ்வொரு  அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வீதம் வழங்கப்படும்.

    எல்லைக்கோடுகளில் ஐந்து வீரர்கள் மாத்திரம் களத்தடுப்பில் மேற்கொள்ள முடியும்.


    1ம்,2ம்,3ம் இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும்

NOTE:-    வலயப்போட்டிகளில் தோல்வியுரும் அணிகளில் இருந்து சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டும் வீரர்கள் BPL சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் கீழ்வரும் முறையே
   
கல்குடா வலயத்தில் 12 வீரர்கள்
   
பட்டிருப்பு வலயத்தில் 12 வீரர்கள்
  
 மட்டக்களப்பு வலயத்தில் 16 வீரர்கள்

BPL சுற்றுக்கான வீரர்களின் எண்ணிக்கை

கல்குடா                  =          3x11  -     33 + 12     =    45

பட்டிருப்பு                =          3x11  =    44 + 12     =    45


மட்டக்களப்பு        =           4x11  =    44 + 16     =    60


மொத்தவீரர்களின்எண்ணிக்கை                                              150         


இந்த 150 வீரர்களும் 10 அணிகளாக பிரிக்கப்படுவார்கள் 15 பேர்படி இதனை 10 நிதி வழங்கும் உரிமையாளர்களே தெரிவு செய்வார்கள். குழுக்கல் முறையில் அத்துடன் 15 பேர் கொண்ட ஓர் அணியில் 3 வலயத்தையும் சேர்ந்த அணி வீரர்கள் குறைந்தது 4 வீரர்களும்  கூடியது 6 வீரர்களகவும் இருப்பார்கள்.
இத் தொடரில் பங்குபற்ற விரும்பும் கழகங்களின் பதிவுகளை எதிர்வரும் 22.08.2014 முன்பதாக ரூபா 1000/= செலுத்தி உங்கள் அணியின் வரரை உறுதி செய்து கொள்ளுங்கள் கீழ் வரும் முகவரியில், 


கல்குடா வலயத்தில்       


Lucky  Stationery & Phone Shop
Main Rd.Santhively.

(பிள்ளையார் ஆலயம் முன்பாக)

பட்டிருப்பு வலயத்தில்


The Galaxy Computer shop
Main Rd,Kaluwanchikudi.

(பெற்றோல் செட் அருகாமையில்)

மட்டக்களப்பு வலயத்தில்


Shiyan Communication
Trinco Rd,Batticaloa.

(தாண்டவன்வெளி ஆலயம் முன்பாக)
மேலதிக தொடர்புகளுக்கு………
077 5027501        077 9597599        075 2696155






Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. busines - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger