Headline NEWS :
Home » » மட்டு.கல்வி வளர்ச்சியின் சிகரம்…

மட்டு.கல்வி வளர்ச்சியின் சிகரம்…

{[['']]}
இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு விழையும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் தரமான உயர்தர கல்வியை வழங்குவதில் தேர்ச்சி பெற்ற ஓர் உயர்தரக் கல்வி நிறுவனமே மட்டுமாநகரின் இதயமாக விளங்கும் புளியந்தீவில் அமைந்துள்ள சிகரம் சுயாதின     பாடசாலையாகும்.
க. பொ. த (உயர்தர) வகுப்புக்களை மிகச் சிறப்பாக நடாத்தி வரும் சிகரம் பாடசாலையின் பிரதான குறிக்கோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிதிறமைச்சித்திகளை (ஆநசவை pயளள) பெற்றுக்கொடுப்பதன் மூலம் கணிசமான அளவு அதிகரிப்பதாகும்.

மீன்மகள் பாடுகின்ற மட்டுநகரின் நீலநிற வாவியை முற்புறமாகக் கொண்டு நகரின் மத்தியில் ரம்மியமான ஒரு இடத்தில் சிகரம் பாடசாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதனை பல புரிந்து இயங்கி வருகின்றது.

மட்டுநகரின் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முற்புறமாக பாதுகாப்பான சூழலில் இப்பாடசாலை அமைந்துள்ளதால் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. பாடசாலைக் கட்டிடத் தொகுதியிலும் அண்மைச் சூழலிலும் சிற்றுண்டி சாலைகள், நூல் நிலையங்கள், உணவு நகரங்கள், முச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள் ஆகியன அமைந்து மாணவர்களின் வசதியை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

சிகரம் பாடசாலையில் வாரநாட்களில் பிற்பகல் மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரையிலும், வார இறுதி நாட்களில் முற்பகல் ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரையிலும்  க. பொ த (உயர்தர) விஞ்ஞான, வர்த்தக, கலை வகுப்புக்கள் பல வருட கால அனுபவத்தைப் பெற்ற சிரேஷ்ட பட்டதாரி ஆசிரியர்களால் நடாத்தப்படுகின்றன.

இவர்களுக்கு உதவியாக சிறந்த வுரவழசள களும் செயற்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வiரையறுக்கப்பட்டு மாணவர்களின் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்தக்கூடியதாக வகுப்புக்கள் மிகச் சீரிய முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அழகான
கற்றலை மேம்படுத்துகின்றன. சிறிய வகுப்பறைச் சூழலில் மாணவர்கள் சிறந்த முறையில் கற்றலை மேற்கொள்ளுவதால் ஆசிரிய – மாணவ உறவு முறை அதிகரிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஒரே கூரையின் கீழ் எல்லாப் பாடங்களையும் தமது பிள்ளைகள் கற்றுக் கொள்வதை ஒரு பேறாகவே பெற்றோர் கருதுவதை அவர்கள் சிகரத்துக்கு காட்டும் ஆதரவு உறுதிப்படுத்துகிறது.

அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர் குழு ஒன்று அமைந்திருப்பது சிகரம் பாடசாலையின் மிகச் சிறந்த அம்சமாகும். உயிரியல், கணிதம், வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் உயர்தர வகுப்புகளில் கற்பிக்கும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் இக் குழுவில் உள்ளனர். ஓய்வு பெற்ற கல்விமான்களில் இருந்து, பாடசாலைகளில் கற்பிக்கும்     ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்களில் இருந்து           வெளியேறிய இளம் பட்டதாரிகள் வரை இவற்றில் அடங்குகின்றனர். 

கால நேரத்துடன் பாடத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, மீட்டல், வகுப்புக்களும், வினாத் தாள் வகுப்புகளும் சிரமமாக நடாத்தப்படக்கூடிய வகையில் நேரசூசி மிக நுட்பமாகத்    தயாரிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது..

இது தவிர இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருக்கும் க. பொ. த (உயர்தர) விஞ்ஞானப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விசேட கருத்தரங்குகள் தொடர்ச்சியாக 10 வாரங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டு மிக ஒழுங்காக நடாத்தப்பட்டு வருகின்றன. யாழ்நகரின் முதல் தர ஆசிரியர்கள் நடாத்தும் இவ் வகுப்புகளில் சிகரம் மாணவர்களுடன் வெளி மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு விஞ்ஞானக் கருத்தரங்கில் யாழ்நகரின் திரு. சந்திரபிரகாசம் (பௌதீகவியல்), திரு. கங்காதரன் (உயிரியல்), திரு. சிவத்திரன் (இரசாயனவியல்), திரு. செந்தில்ராஜா,    திரு செந்தில்நாதன், திரு விமலநாதன் (இணைந்த கணிதம்) ஆகியோருடன் சிகரம் ஆசிரியர்களான திரு. குணம் சவரிராஜா, (உயிரியல்), திரு. இராஜேந்திரா (பௌதீகவியல்)        திரு. கங்காதரன் (இரசாயனவியல்), திரு. சேந்தன் (இணைந்த காணிதம்)
ஆகியோர் பங்குபற்றுகின்றனர். கல்வியின் தரத்தையும் பெறுமானத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கு வெளியில் இருந்து விரிவுரையாளர்களை அழைத்து மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை சிகரம் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தவிர க.பொ. த சாதாரண வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்குகளும் வலயக்கல்வி சேவைக்கால ஆசிரிய   ஆலோசர்களையும் அனுபவமிக்க ஆசிரியர்களையும் கொண்டு சிகரம் பாடசாலையால் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மகாஜனக்கல்லூரி, கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயம், ஊறணி சரஸ்வதி மகாவித்தியாலயம், அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மாணவர்களை வரவழைத்து கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆகிய பாடங்களில் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன. அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர், மாணவர் ஆகியோரிடமிருந்து இக் கருத்தரங்குக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்த்து குறிப்பிடத்தக்கது.

தற்போது க. பொ. த (உயர்தர) வகுப்புகளில் கவனம் செலுத்தப்பட்டாலும் கூட எதிர்காலத்தில் ஆரம்ப வகுப்பு முதல் சகல வகுப்புக்களும் விசேட ஆங்கில வகுப்புக்கள், தகவல் தொழில் நுட்பம், அரசு சார்ந்த பொதுப்பரீட்சை ஆயத்தங்கள், பிரத்தியேக துறை சார்ந்த பொதுப்பரீட்சை ஆயத்தங்கள் அனைத்தும் ஒரு கூரையின் கீழ் கற்கக் கூடிய வகையில்  தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    விசேடமாக ஆங்கில ஊடக முன்பள்ளி வகுப்புக்கள்     ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான விசேட ஆசிரியர்     பயிற்சியும் நடைபெறுகின்றது.

    தகவல் தொழிநுட்ப பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி     தகுதியான மாணவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட     வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களும் மேற்கொள்ளப்பட     உள்ளது.

    உயர்தரப் பிரிவு விஞ்ஞானத்தில் செயல்முறை     வகுப்புக்களுடன் இணைந்த கற்பித்தல் நடவடிக்கை     மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

    எதிர்வரும் ஐப்பசி மாதத்திலிருந்து க.பொ. த உயர்தர     பரீட்சையில் தோற்றிவிட்டு மீண்டும் தொடரவிரும்பும்     மாணவர்களுக்கான விசேட பகல் நேர வகுப்புக்கள்     ஆரம்பிக்கப்படவுள்ளன. 


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. busines - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger